பாலாவுக்கு தம்பியா இருப்பாரோ..? புஷ்பா 2 பட இயக்குனர் செய்த வேலை... ஹார்ட்டாக்கில் புரொடியூசர்!...
தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகின்றார். அதிலும் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா தி ரைஸ்' என்ற திரைப்படம் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் புஷ்பராஜ் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். இந்த படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. மேலும் ரஷ்மிகா மந்தராவும் இந்த படத்தில் பட்டையை கிளப்பியிருப்பார். இதைத்தொடர்ந்து இப்படத்தில் இரண்டாவது பாகம் தயாராகி வருகின்றது.' புஷ்பா தி ரூல்' என்கின்ற பெயரில் இப்படம் உருவாகி வருகின்றது.
இந்த படத்தையும் இயக்குனர் சுகுமார் தான் இயக்கி வருகின்றார். முதல் பாகமே 500 கோடி வரை வசூலை வாரி குவித்ததால் இரண்டாவது பாகம் கட்டாயம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் ஒவ்வொரு காட்சியையும் சுகுமார் செதுக்கி வருகின்றார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதம் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது புஷ்பா படத்தின் இயக்குனர் தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.
இந்த படத்தின் 60 நாள் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 200 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இயக்குனர் இந்த படத்தின் காட்சிகள் தனக்கு திருப்தி கொடுக்காத காரணத்தினால் மீண்டும் ரீசூட் பண்ண வேண்டும் என்று கூறியிருக்கிறாரா. இதை கேட்ட தயாரிப்பாளருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கின்றார்.