தென் ஆப்பிரிக்காவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்ப விரும்பினால் அவருக்கான கதவு திறந்தே உள்ளது என பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர்களான டிவில்லியர்ஸ் மற்றும் ஹசிம் அம்லா ஆகியோர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அந்த அணி ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் நிர்வாகிகளோடு கருத்து வேற்றுமைக் காரணமாக டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்ற நிலையில் இப்போது மீண்டும் அணிக்கு வர ஆர்வமாக இருக்கிறார்.
இது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் புதிய பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ள கருத்தில் ‘ டிவில்லியர்ஸ் பொது வெளி மற்றும் ஊடகங்களில் இது குறித்து பேசி வருகிறார். ஆனால் என்னிடம் அதுபற்றி எதுவும் பேசவில்லை. ஒருவேளை அவர் உடல்தகுதியோடு சிறந்த ஆட்டத்திறனோடு இருந்தால் கண்டிப்பாக அவருக்கு இடம் உண்டு. சிறந்த அணியை 20 ஓவர் உலகக்கோப்பைக்கு அணுப்ப நாங்கள் தயாராக உள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…