பிகில் வசூல் எதிரொலி – உச்சத்துக்கு சென்ற விஜய் சம்பளம் !

பிகில் படத்தின் கலெக்‌ஷன் அதிகமாக இருப்பதால் தனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.

a40375fdc1c6ab53b13cdf276464fb8b

பிகில் படத்தின் கலெக்‌ஷன் அதிகமாக இருப்பதால் தனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.

விஜய் சமீபத்தில் நடித்த தெறி, மெர்சல், சர்க்கார் ஆகிய படங்கள் நல்ல வசூல் செய்து வருகின்றன. இதையடுத்து கடந்த தீபாவளிக்கு வெளியான அவரது பிகில் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. தியேட்டர்களிலும் அநியாய விலைக்கு டிக்கெட்கள் விற்கப்பட்டு ரசிகர்களின் பணத்தை சுரண்டி லாபம் பார்த்தனர்.

அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலையால் கலெக்‌ஷன் அதிகமாக வந்தது. அதனால் இப்போது விஜய் தனது சம்பளத்தைக் கிடுகிடுவென உயர்த்த முடிவு செய்துள்ளாராம். அந்த சம்பளம் ரஜினியின் சம்பளத்துக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளதாம். அந்த அளவு விஜய்க்கு சம்பளம் கொடுத்து படமெடுக்க இனி ஏஜிஎஸ், சன் பிக்ஸர்ஸ், லைகா போன்ற கார்ப்பட்ரேட் நிறுவனங்களுக்கே சாத்தியம் என்பதால், தயாரிப்பாளர்கள் நெருங்க முடியாத இடத்துக்கு சென்றுள்ளார் விஜய்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *