தனுஷின் கடனை அடைக்க முன்வந்த பிரபல தயாரிப்பாளர்?

Published on: January 30, 2020
---Advertisement---

477374911ecf672e35a720579b7857dd

தனுஷ் தயாரித்து நடித்த விஐபி-2, மாரி 2’ உட்பட ஒரு சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் அவருக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் தன்னுடைய கடனை அடைக்க அவர் பிரபல தயாரிப்பாளரிடம் தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடித்து கொடுக்க சம்மதித்து உள்ளதாகவும், இதற்காக அவருக்கு ரூபாய் 75 கோடி சம்பளம் தர ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என்ற தகவல் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன 

ஏற்கனவே கௌதம் மேனனின் கடனை அடைக்க உதவி செய்த ஐசரி கணேஷ், தற்போது தனுஷின் கடனை அடைக்க உதவி செய்ய இருப்பதாகவும் அவரது பேனரில் தனுஷ் தொடர்ச்சியாக மூன்று படங்களை நடிக்க இருப்பதாகவும் இந்த படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 

இந்த 3 படங்களின் அறிவிப்பும் ஒரே நாளில் வெளிவரும் என்றும் அடுத்த ஆண்டு தொடங்கும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு அடுத்த ஆண்டே  இந்த மூன்று படங்களும் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படங்களின் இயக்குனர்கள் குறித்த தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக தனுஷ் தொடர்ச்சியாக நான்கு படங்கள் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் அசுரன் மற்றும் பட்டாஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல லாபத்தைக் கொடுத்ததை அடுத்து அவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் தற்போது முன் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment