மாலையுடன் காத்திருந்த ரசிகர்.. விஜய் செய்த காரியம்.. வைரல் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் நடந்து வருகிறது. எனவே, கர்நாடகாவில் உள்ள விஜய் ரசிகரக்ள் விஜயை பார்ப்பதற்காக படப்பிடிப்பு தளத்தின் அருகேயும், விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியேயும் காத்திருக்கின்றனர். மேலும், விஜய் வெளியே வரும்போது அதை செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. விஜயை பார்க்க ஒரு ரசிகர் மாலையுடன் அங்கே கால்கடுக்க காத்துக்கொண்டிருந்தார். ஹோட்டலில் இருந்து வெளியே வந்த விஜய், அந்த ரசிகரை பார்த்ததும் அங்கிருந்து அவரின் அருகில் வந்து மாலையை கழுத்தில் வாங்கிக் கொண்டு அவரின் கன்னதில் செல்லமாக தட்டிச்சென்றார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Published by
adminram