தமிழ் சினிமா ரசிகர்களை அண்ணாந்து பார்க்க வைத்த படம் !

by adminram |

b70fa6c3f76615b395e809fff6972beb-5

இசைஞானியின் கடைசி வாரிசு யுவன் ஷங்கர் ராஜா. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்பதற்கேற்ப இவரும் தந்தையைப் போல பன்முகத்திறன் கொண்டவர் தான்.

இவர் இசை அமைப்பாளர், பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்.

இவர் பல்துறை இசை அமைப்பாளர் என்றால் மிகையில்லை. குறிப்பாக வெஸ்டர்ன் மியூசிக்கில் இவர் பெரிய கில்லாடி. மேலும் தமிழ்த்திரையுலகில் ஹிப் ஹாப் இசையை இவர் தான் அறிமுகப்படுத்தினார்.

0e6fc65eb11f6db0c849f7e2331e8f11

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ரீமிக்ஸ் பாடல்களை அறிமுகப்படுத்தியவரும் இவர் தான். ராம் படத்திற்காக சர்வதேச திரைப்பட விழாவில் விருதை பெற்றார். 100க்கும் மேற்பட்ட படங்களில் இசை அமைத்து வெற்றி கொடியை நிலைநாட்டியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

தமிழ்த்திரை உலகில் 1996ல் வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார். அப்போது இவருக்கு வயது 16. இவர் இசை அமைத்து செம ஹிட் ஆன படங்கள் நிறைய உள்ளன.

மனதை திருடி விட்டாய், நந்தா, ஏப்ரல் மாதத்தில், காதல் கொண்டேன், வின்னர், மௌனம் பேசியதே, பேரழகன், சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, தீபாவளி, மன்மதன், யாரடி நீ மோகினி, சிலம்பாட்டம், ஏகன், சிவா மனசுல சக்தி, நான் மகான் அல்ல, பில்லா 2, அஞ்சான், பூஜை, இரும்பு திரை, மாரி 2, சக்ரா, களத்தில் சந்திப்போம் உள்பட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது வலிமை, மாநாடு ஆகிய படங்களில் பட்டையைக் கிளப்பி வருகிறார். 2 பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றுள் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.

துள்ளுவதோ இளமை

8c35c7fe6851165edb0e04b3ebeba49f-2

2002ல் வெளியான படம். தமிழ் சினிமா ரசிகர்களை அண்ணாந்து பார்க்கச் செய்தது. செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய முதல் படம். கஸ்தூரி ராஜா இயக்கினார். செல்வராகவன் திரைக்கதை எழுதினார். இப்படத்தின் இசை மற்றும் பாடல்கள் இளம் தலைமுறையினரை வெகுவாகக் கவர்ந்தது.

இப்படத்தில் செல்வராகவன் தம்பி தனுஷ் தான் கதாநாயகன். இவருக்கு இதுதான் அறிமுக படம். டீன் ஏஜ் பருவத்தினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் இது. வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. கதாநாயகி ஷெரின். தலைவாசல் விஜய், விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

7 ஜி ரெயின்போ காலனி

2004ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம். ரவி கிருஷ்ணா அறிமுக கதாநாயகன். சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். யுவனின் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின.

நினைத்து நினைத்து பார்த்தால், கனா காணும் காலங்கள், நாம் வயதுக்கு வந்தோம், சந்தோஷத்தின் இசை, கண் பேசும் வார்த்தைகள், இது போர்களமா, ஜனவரி மாதம் ஆகிய பாடல்கள் அக்கால இளைஞர்களை முணுமுணுக்க வைத்தன.

பூவெல்லாம் கேட்டுப்பார்

1999ல் வெளியான காதல் கலந்த நகைச்சுவை படம். வசந்த் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, நாசர், விஜயகுமார், அம்பிகா, கரன், மனோரமா, டெல்லி கணேஷ் வடிவேலு உள்பட பலர் நடித்தனர். இப்படத்தின் இசையை வடிவமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. சிபிஐ எங்கே, சுடிதார் அணிந்து, இரவா பகலா, பூத்தது, பூவ பூவே, ஓ சென்யரிட்டா, செவ்வானம் வெட்கம் கொண்டது ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் இரவா பகலா, சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே ஆகிய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. இது காதலா, தீண்ட தீண்ட, கண்முன்னே, வயது வா வா, நெருப்பு கூத்தடிக்குது, காற்றுக்கு, வானம் ஒரு, தீப்பிடித்த கண்கள் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தீனா

656997aaed4346cae7ed956e12344bc7

2001ல் தல அஜீத் நடிப்பில் வெளியான அதிரடி திரைப்படம். ஆர்.முருகதாஸ் இயக்க இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மெஹா ஹிட் ஆகின. இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை இசைப்பிரியர்களை வெகுவாக கவர்ந்தன. இப்படம் ஏ.ஆர்.முருகதாஸ_க்கு முதல் படம்.

தல அஜீத் உடன் சுரேஷ் கோபி, லைலா, திவ்யா, ஸ்ரீமன், நக்மா உள்பட பலர் நடித்துள்ளனர். என் நெஞ்சில் மிங்கிள், காதல் வெப்சைட் ஒன்று, நீ இல்லை என்றால், சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல், வத்திக்குச்சி பத்திக்காதடி ஆகிய பாடல்கள் உள்ளன.

நம்ம டீம் சார்பாக யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Next Story