டைட்டானிக் நாயகன் நடிக்கும் முதல் இந்திய திரைப்படம்: ஒரு ஆச்சரியமான தகவல்

Published on: January 26, 2020
---Advertisement---

dd19ad7fc2da9bb83a36353861c2ca8e

கடந்த சில வருடங்களாக ஹாலிவுட் நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டைட்டானிக் படத்தில் நடித்த டிகாப்ரியோ இந்திய படங்களில் நடிக்க தற்போது ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

டைட்டானிக் உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த டிகாப்ரியோ நடித்த பல படங்கள் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. தி ரெவனன்ட்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை டிகாப்ரியோ வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது நடித்து முடித்துள்ள ’ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ என்ற திரைப்படமும் 10 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால் நிச்சயம் மூன்றுக்கு மேல் ஆஸ்கார் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது 

இந்த நிலையில் டிகாப்ரியோ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு இந்திய திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் டிகாப்ரியோவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் அவர் விரைவில் ஹிந்தி திரைப்படங்களில் நடிப்பார் என்றும் அந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தெரிகிறது. மேலும் தமிழ் இயக்குனர் ஒருவரும் டிகாப்ரியோவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது

Leave a Comment