நண்பர்கள் தினத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த "பிரண்ட்ஷிப்" படக்குழு!

6b90f1cd324c5d91d1eb79d9345d9601

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதுவும் முதல் படத்திலே பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக . "பிரண்ட்ஷிப்" என்ற படத்தில் நடித்துள்ளார். ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கும் இப்படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

அர்ஜுன், லாஸ்லியா, ஹர்பஜன் சிங் , சதிஷ் பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு படத்தின் சில காட்சிகளின் தொகுப்புகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டு "Glimpse of Friendship" என கேப்ஷனுடன் தமிழ், தெலுங்கு , இந்தி என மூன்று மொழிகளில் படத்தின் ஹீரோ ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.

Related Articles
Next Story
Share it