More

இன்ஸ்டாகிராமில் ஆரம்பித்த நட்பு கர்ப்பத்தில் முடிந்தது – மாணவியை வல்லுறவு செய்த இளைஞர் மீது போக்ஸோ சட்டம் !

இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவிக்கு நட்பான இளைஞர் அவரை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

Advertising
Advertising

மதுரையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் படித்து வருகிறார். பள்ளி படிப்புக்காக அவருக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியின் மூலம் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆர்வமாக இருந்துள்ளார். அதில் மாணவி பதிவிடும் புகைப்படங்களுக்கு மதுரையைச் சேர்ந்த அல் ஹசன் என்ற இளைஞர் கமெண்ட் செய்து வர்ணித்து அவரிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார்.

இவர்களின் பழக்கம் நெருக்கமாகி செல்போன் நட்பாக மாற, தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை அவர் ஹசனுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளார். இதையடுத்து இருவரும் நாமக்கல்லுக்கு

சென்று விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது மாணவியின் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் எனக் கூறி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையடுத்து சில மாதங்களுக்குப் பிறகு மாணவி மயக்கமடைய, மருத்துவமனையில் சேர்க்க, அவர் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி நடந்ததைக் கூற இளைஞர் ஹசனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts