சமீபத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் போராட்டம் எழுந்தது. டெல்லியில் துவங்கிய போராட்டம் படிப்படியாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெடித்தது. மேலும், சமூக வலைத்தளமான டிவிட்டரில் #CAA Protest(Citizenship Amendment Act)என்கிற ஹேஷ்டேக்கும் கடந்த சில நாட்களாகவே டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து பாஜக ஆதரவாளர்கள் நேற்று டிவிட்டரில் #IndiaSupportCCA என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்கில் கொண்டு வந்தனர். அதாவது #CAA என்பதற்கு பதிலாக #CCA என தவறுதலாக ஒருவர் பதிவிட மற்ற அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட் செய்திருந்தனர். இதில் நகைச்சுவை என்னவெனில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் அதே ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டிவிட் போட, நெட்டிசன்கள் அவரை கடுமையாக கிண்டலடிக்க துவங்கி விட்டனர்.
அதன்பின் சுதாரித்த ஹெச்.ராஜா அந்த பதிவை நீக்கிவிட்டு #IndiaSupportCAA என்கிற ஹேஷ்டேக்கை பதிவு செய்துள்ளார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…