More

மனித வேட்டையாட நகர்வலம் சென்ற மஹாராஜா- வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த ஆளப்பிறந்தவன்

1987ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் ஆளப்பிறந்தவன். இப்படத்தில் சத்யராஜ், அம்பிகா, சில்க் ஸ்மிதா, போன்றோர் நடித்தனர். இப்படத்தின் இயக்குனர் ஏ.எஸ் பிரகாசம். இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தில் சினிமாக்களை இயக்கினார்.

Advertising
Advertising

எச்சில் இரவுகள், கார்த்திக் இரட்டை வேடத்தில் நடித்த ஆயிரம் நிலவே வா, சிவாஜிகணேசன் நடித்த சாதனை போன்ற வித்தியாசமான படங்களை இயக்கினார். சாதனை உண்மையில் ஒரு மிகச்சிறந்த கதை. அந்தக்கால அனார்கலி, சலீம் வாழ்க்கையை படமாக்குகிறேன் என மெனக்கெடும் ஒரு இயக்குனரின் கதையை உணர்வுபூர்வமாக சாதனை படத்தில் படமாக்கி இருந்தார். இந்த படத்தில் சிவாஜிகணேசன் இயக்குனராக நடித்திருந்தார்.

ஒவ்வொரு படத்திலும் யாரும் இயக்காத கதையை தேடும் பாணி உள்ளவர் இவர். சாதனை படத்துக்கு பிறகு  சத்யராஜ் நடிப்பில் ஆளப்பிறந்தவன் படத்தை இயக்கினார். ஆளப்பிறந்தவன் கதையை இதுவரை தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் தொடவில்லை என சொல்லலாம். நாடக நடிகராக சத்யராஜ். ராஜாவாக நடிக்கிறார். ராணியாக சில்க் ஸ்மிதா நடிக்கிறார். மனுநீதி சோழனாக நடிக்கும் சத்யராஜ் யார் நீதி கேட்டாலும் சரியான நீதியை வழங்குவார். அன்று நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது வழக்கமாக சத்யராஜிடம் நீதி கேட்டு ப்ராது கொடுக்க வரும் நபர் சரியான பேட்டா கொடுக்காததால் வரமாட்டார். உணர்ச்சிகரமாக சத்யராஜ் நடித்துக்கொண்டிருக்கும்போது நீதி கேட்டு வரும் நபர் பேட்டா கொடுக்காத காரணத்தால் சீனுக்கு வரமாட்டார். நாடக குழு சற்று அதிர்ச்சியில் இருக்கும்போது திடீரென ஒரு சிறுவன் நீதி கேட்டு வந்து நிற்பான் அதை நாடக குழுவும் மஹாராஜாவாக நடிக்கும் சத்யராஜூம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் ஒரு வழியாக அந்த சீனை சமாளிக்க மனு நீதி சோழனான சத்யராஜ் அந்த சிறுவனிடம் குறை கேட்பார். அந்த சிறுவனும் உண்மையிலேயே தன் தந்தையும் தாயும் சமூக விரோதிகளால் கொல்லப்பட்ட விசயத்தை ப்ராதாக கொடுப்பார்.இதை கேள்விப்பட்ட சத்யராஜ் நாடகம் நடந்து கொண்டிருப்பதால் அதிர்ச்சியைடவது போல் காட்டிக்கொள்ளாமல் அந்த சிறுவனிடம் அவர்களை தண்டிக்கிறேன் என கூறிவிட்டு அந்த சீனை முடித்து விடுவார். இருப்பினும் அந்த சிறுவன் சொன்னது சத்யராஜ் மனதிலே உறுத்திக்கொண்டே இருக்க அந்த சிறுவனிடம் விபரம் கேட்டு இரவு மஹாராஜா நகர்வலம் செல்வதாக நாடக கம்பெனியில் இருக்கும் மஹாராஜா உடையை அணிந்து கொண்டு கையில் வாள் எடுத்துக்கொண்டு இரவில் சென்று எதிரிகளை சமூக விரோதிகளை கொன்று அந்த இடத்தில் மஹாராஜா என்று எழுதி வைத்து விட்டு வந்து விடுவார்.

இப்படி தினம் தோறும் நடப்பதால் யார் அந்த மஹாராஜா என மக்கள் ஊரெங்கும் புகழ்ந்து பேச ஆரம்பித்து விடுவார்கள். வில்லன்களும் யார் யார் என்று தேடுவார்கள்.

இறுதியில் முக்கிய வில்லன்களை சத்யராஜ் அழித்தாரா என்பது கதை. இந்த படம் சத்யராஜுக்கு பெய்லியர் படம்தான் காரணம் என்னவென்றால் இயக்குனரான பேராசிரியர் பிரகாசம் ஆரம்பத்திலேயே முக்கிய காட்சிகளை எல்லாம் வைத்து முடித்து விடுவார். முக்கியமாக சத்யராஜ் கொலை செய்யும் காட்சிகளை அடுத்தடுத்து வைத்து விடுவார். படத்தின் பிற்பாதியில் கதையை நகர்த்த சிரமப்படுவார்.

படத்தில் சத்யராஜின் காதலியாக போலீஸ் அதிகாரியாக அம்பிகா. சத்யராஜ்தான் மஹாராஜா வேடத்தில் கொலை செய்பவர் அவரை கைது செய்ய தயக்கம் காட்டி ஒரு கட்டத்தில் ஸ்ட்ரெயிட் பார்வர்ட் போலீசாக, சத்யராஜை கைது செய்வார்.

படத்தின் வில்லன்களாக வினுச்சக்கரவர்த்தி, சுதர்சன், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் நடித்திருந்தனர். ஆரம்பத்தில் விறுவிறுப்பாக செல்லும் கதை பின்பு திசைமாறி எங்கெங்கோ சென்று விடும். மக்களிடம் குறை கேட்டு மக்களின்  குறையை நிவர்த்தி செய்கிறேன் சமூக விரோதிகளை மஹாராஜா வேடத்தில் கொலை செய்வது புதிய கதைதான் இடைவேளைக்கு பிறகு திரைக்கதை வலுவின்மையால் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மஹாராஜாவாக வரும் சத்யராஜ் இறுதியில் உயிர் துறப்பது போன்ற மைனஸ்கள் படத்தில் இருக்கும். என்னதான் இருந்தாலும் 80ஸ் பின்னணியில் வந்த படங்கள் எல்லாமே படத்தின் மைனஸ் ஆன விசயத்தை எல்லாம் தாண்டி பார்க்கும் வகையிலே இருக்கும் அதற்கு இந்த படமும் சரியான உதாரணம். இன்றும் இப்படம் குறைகளை மறந்து பார்த்து ரசிக்கும் வகையிலேயே இருக்கும்.

இந்த படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் பிரமாதமாக இருந்தன. இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி, ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி போன்ற பாடல்கள் ஹிட் ஆகின இன்றளவும் இப்பாடல்கள் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts