காதலுக்காக பெண்ணாக மாறிய நபர் – திருமணத்துக்குப் பின் நடந்த கொடுமை !

ஆந்திராவில் தனது நண்பனின் பேச்சைக்கேட்டு பெண்ணாக மாறி அவரைத் திருமணம் செய்துகொண்ட நபர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், ராமகுண்டம் மாவட்டம் பெத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷும் அவரோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்த அபிஷேக் என்ற மாணவனுக்கும் இடையே நெருக்கமான பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கம் அவர்கள் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அபிஷேக்கின் நடை உடை பாவனைகள் பெண்ணைப் போலவே இருந்ததால் அவரை பெண்ணாக மாறும் பாலின அறுவை சிகிச்சை செய்துகொள்ள சந்தோஷ் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அபிஷேக் தனது பெயரை அர்ச்சனா என்று பெயரை மாற்றிக்கொண்டு சந்தோஷை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் அதன் பின்னர் இருவரும் ஒன்றாக வசிக்க ஆரம்பித்த போது சந்தோஷ், அர்ச்சனாவை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் இனி அவரோடு வாழ முடியாது எனவும் சொல்லியுள்ளார். இதையடுத்து அர்ச்சனா காவல் நிலையத்தில் சந்தோஷ் மீது புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்ற காவல்துறையினர் சந்தோஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
adminram