மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் இன்று மதியம் முதல் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் மாஸ்டர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த விஜய்யை அழைத்துச் சென்று அவரது வீட்டில் ஒரு நாள் முழுவதும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் இப்போது மாஸ்டர் படத்தின் இணைத்தயாரிப்பாளராக இருக்கும் லலித்குமார் வீட்டில் மதியம் முதல் வருமான வரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இன்னும் 5 நாட்களில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீடு நடக்க இருப்பதால் இப்போது இந்த ரெய்டு நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…