விஜய் சேதுபதியை ஏமாற்றிய மாஸ்டர் படக்குழு

Published on: January 17, 2020
---Advertisement---

aded05ef0db47470ced585abb5787cba-1

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வில்லனாகாட்டும் அல்லது ஹீரோவாகட்டும் எதுவாக இருந்தாலும் அதில் மாஸ் காட்டுவது இவரது ஸ்டைல். நேற்று முந்தினம் இவர் தனது பிறந்தநாளை யாதும் ஊரே யாவரும் கேளிர் படக்குழ்வினருடன் கொண்டாடினார்.

பொதுவாக நடிகர்கள் பிறந்த நாளன்று அவர்கள் நடிக்கும் படத்தின் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி செய்வது வழக்கம். விஜய் சேதுபதி தற்போது மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அடுத்த போஸ்டர் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  விஜய் சேதுபதி பிறந்த நாளான அன்று அடுத்த போஸ்டர் வெளியாகிறது என்றவுடன் அது மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி லுக்காக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் நேற்று முந்தினம் இரண்டாவது போஸ்டரும் வெளியானது. ஆனால் அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி இல்லை. இதனை கண்ட அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.   

Leave a Comment