மீடியாக்களே எல்லாவற்றுக்கும் காரணம்: நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞர் அதிருப்தி

46b3863e02516e501ce8416e290def33-1

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா என்ற பெண்ணை ஆறு பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நால்வருக்கு ஜனவரி 22ஆம் தேதி தூக்கு தண்டனையை டெல்லி நீதிமன்றம் உறுதி செய்தது

இந்த நிலையில் இந்த வழக்கு ஆரம்பத்திலிருந்தே பாரபட்சமாக நடந்து வருவதாகவும் இவை எல்லாவற்றுக்கும் மீடியாக்களே காரணம் என்றும் குற்றவாளிகளின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்த வழக்கிற்கு மீடியாக்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது என்றும் இந்த வழக்கை உடனடியாக முடிக்க வேண்டும் என்று மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து அழுத்தம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே இந்த வழக்கு பாரபட்சமாக அவசர அவசரமாக முடிக்கபட்டதாகவும் நிர்பயா குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் பேட்டி அளித்துள்ளார்

மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகள் விசாரிப்பார்கள் என்றும் அப்போது தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வர வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். குற்றவாளிக்கு ஆதரவாக வாதாடியது மட்டுமன்றி கோர்ட்டின் தீர்ப்பை விமர்சனம் செய்துள்ள வழக்கறிஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Related Articles

Next Story