உல்லாசமாக இருக்க முடியவில்லை…சிறுமியை அடித்தே கொலைசெய்த தாய்…..

ராணிப்பேட்ட்டை காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஆயர்பாடியில் வசிப்பவர் சங்கர். இவர் 7 வருடங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது தங்கு தன்னுடன் பணிபுரிந்து வந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு  சவுமியா என்கிற பெண் குழந்தை உண்டு. ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். எனவே, சவுமியாவை சங்கர் தனது பெற்றோரின் பராமரிப்பில் விட்டு விட்டு ராணிப்பேட்டை வந்து விட்டர்.

இந்நிலையில், சமீபத்தில் சந்தியா என்கிற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். வாலஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். தற்போது சந்தியா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். சமீபத்தில் தனது 3 வயது மகள் சவுமியாவை தனது வீட்டிற்கு அழைந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி உடம்பெல்லாம் காயத்தோடு சவுமியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, பதறியடித்து சவுமியாவின் தாத்த, பாட்டி மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால், சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். உடலில் காயங்கள் இருந்ததால் சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சிறுமியின் தாத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில் சங்கர் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை கொடுத்தது ‘ சமீபத்தில்தான் என் மகளை வீட்டிற்கு அழைத்து வந்தேன். அவளை என் 2வது மனைவிக்கு பிடிக்கவில்லை. நாங்கள் உல்லாசமாக இருக்க அவள் தடையாக இருப்பதாக சந்தியா கருதினாள். எனவே, பருப்பு கடையும் மத்துக்கட்டையால் சவுமியாவை தலையில் அடித்தாள். மாடிப்படியிலிருந்து எட்டு உதைத்தாள். எனவே, கூர்மையான பகுதியில் மோதி அவள் நெஞ்சில் காயம் ஏற்பட்டு மயங்கி விட்டாள். உயிர் இருக்கும் என நினைத்தோம். ஆனால், வழியிலேயே இறந்து விட்டாள்’ எனக்கூறியுள்ளார்.

இதனையடுத்து, சங்கர், சந்தியா இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Published by
adminram