ஆட்டோவில் கள்ளக்காதலியின் பெயர் – மனைவியிடம் சிக்கிய கணவன் எடுத்த முடிவு !

Published on: January 28, 2020
---Advertisement---

fa50375c256e97bb61ad61c0857c0f9e

சென்னையில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கள்ளக்காதலுக்காக தனது மனைவியைக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

சென்னை புறநகர் பகுதியான மதுரவாயலில் வசித்து வந்த தம்பதிகள் ஜெயவேல் மற்றும் திலகம். இவர்கள் இருவருக்கும் சஞ்சய் மற்றும் ஜனனி என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக திலகம் இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் கணவர் ஜெயவேல் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து திலகத்தின் உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில் திலகா கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் ஜெயவேலியிடம் தங்கள் விசாரணையைத் தொடங்க மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜெயவேல் மற்றும் திலகம் ஆகியோர் முன்பு தங்கியிருந்த பகுதியில் உள்ள திலகத்தின் தோழி ஒருவர் அடிக்கடி இவர்கள் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஜெயவேலுக்கும் அவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனது ஆட்டோவில் அந்த பெண்ணின் பெயரையும் எழுதியுள்ளார் ஜெயவேல். இதனால் திலகத்துக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட குடிபோதையில் தலையணையை வைத்து அழுத்தியும் திலகத்தின் புடவையால் அவரைக் கழுத்தை நெறித்தும் கொலை செய்துள்ளார் ஜெயவேல்.

Leave a Comment