சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட 170 நாடுகளுக்கும் பரவி விட்டது. இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. மேலும், விமானம் மூலம் தமிழகம் வந்த சில ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கடந்த 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியே வரவேண்டாம் எனக்கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், தற்போது மக்களிடம் மீண்டும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
22ம் தேதி மக்கள் வெற்றிகரமாக உரடங்கு உத்தரவை பின்பற்றியது போல் இன்று இரவு 12 மணிமுதல் இன்னும் 21 நாட்களுக்கு பின்பற்ற வேண்டும். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். எனக்கு ஒவ்வொரு இந்தியனும் முக்கியம். காட்டுத்தீ போல் கொரோனா பரவி வருகிறது. உங்களுக்கு தெரியாமலே கொரோனா உங்களை தொற்றுக்கொள்ளும். அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். நீங்கள் வெளியே சென்றால் கொரோனா உங்கள் வீட்டிற்கு வரும்.
மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இல்லையேல் பேரழிவை சந்திக்க நேரிடும். அரசுடன் 100 சதவீதம் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும். அதற்கு ஒரே வழி வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதுதான்.வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியார்களின் சிரமங்களை உணருங்கள்.
ரஜினி, விஜய்…
Keerthi suresh:…
சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராம்…
சிவகார்த்திகேயன் சுதா…
VijayTV: விஜய்…