இதன் விளைவாக தமிழகத்தை சேர்ந்த அனிதா ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதிலிருந்து பின் வாங்கவில்லை. உச்ச நீதிமன்றமும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்துவிட்டது.
இந்நிலையில், நீட் தேர்வால் கோவையை சேர்ந்த மற்றொரு மாணவியும் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வசிப்பவர் ரவிச்சந்திரன். அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மகள் சுபஸ்ரீ(19). மருத்துவராக ஆசைப்பட்ட சுபஸ்ரீ கடந்த வருடம் நீட் தேர்வை எழுதியுள்ளார். ஆனால், தேர்ச்சி அடையவில்லை. எனவே, இந்த வருடம் எப்படியாவது தேர்ச்சி அடைந்து விட வேண்டும் என படித்து வந்தார். இதற்காக பயிற்சி நிலையத்திலும் சேர்ந்து படித்தார். நீட்தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
ஆனால், தேர்வில் எப்படி கேள்விகள் கேட்பார்கள்? கடினமாக இருக்குமோ? தான் மீண்டும் தோல்வி அடைந்துவிடுவோமோ? என்கிற பயத்தில் இருந்த சுபஸ்ரீ, மன உளைச்சல் அடைந்து தற்கொலை முடிவை எடுத்துள்ளார். எனவே, வீட்டில் யாருமில்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அவரின் பெற்றோர் கதறி அழுதனர். இவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீட் தேர்வால் இன்னும் எத்தனை மாணவிகளை தமிழகம் பலி கொடுக்குமோ தெரியவில்லை.
லைகா நிறுவனத்தின்…
நயன்தாரா, தனுஷ்…
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…