கடந்த 2009ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த நாடோடிகள் திரைப்படத்தில் காதலின் புனிதத்தை கூறிய நிலையில் 11 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் நாடோடி 2’ என்ற படத்தின் மூலம் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் இணைந்து ஜாதி வெறியை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வரும் ஜாதி வெறியால் ஏற்படும் ஆணவக்கொலை குறித்த கதைதான் இந்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. சசிகுமார் சமூக சேவை செய்து சமுதாயத்தில் இருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார். இதனால் அவருக்கு சொந்த மாமா உள்பட யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இந்த நிலையில் திடீரென அதுல்யாவின் பெற்றோர்கள் அதுல்யாவை சசிகுமாருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர் திருமணம் முடிந்த முதல் இரவு அன்று தான் அதுல்யாவின் பின்னணி குறித்து சசிகுமாருக்கு தெரிய வருகிறது. இதனால் கடும் அதிர்ச்சி அடையும் சசிகுமார் அதன்பின் எடுக்கும் ஒருசில முக்கிய முடிவுகளும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் ஜாதி வெறி பிடித்த அதுல்யாவின் குடும்பத்தினர்கள் கொடுக்கும் தொல்லைகளும் அதை எப்படி சசிகுமார் சமாளித்தார் என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை ஆகும்
சமுத்திரகனி இந்த படத்தில் ஜாதி வெறிக்கு எதிராக வைத்துள்ள ஒவ்வொரு வசனங்களும் நச்சென்று உள்ளது. ’’நாளைக்கே மாற்றம் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை அடுத்த தலைமுறையாவது மாறட்டும்” என்று ஆங்காங்கே சாதிக்கு எதிரான கருத்துக்களை சமுத்திரக்கனி வைத்துள்ளார்
சசிகுமார் வழக்கம்போல தனது மிரட்டல் நடிப்பை கொடுத்துள்ளார். ஜாதி வெறிக்கு எதிராக அவர் போராடும் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது. அஞ்சலி,அதுல்யா ஆகிய இரண்டு நாயகிகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை உணர்ந்து கனகச்சிதமாக நடித்துள்ளனர்
பரணிக்கு இவ்வளவு முக்கியத்துவமான கேரக்டரை கொடுத்த சமுத்திரக்கனிக்கு உண்மையில் ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும். ஒரு சராசரி மனிதன் எப்படி எல்லாம் சிந்திப்பான் என்பதை திரையில் பரணி தனது கேரக்டர் மூலம் அப்படியே கொண்டு வந்திருக்கின்றார்
மேலும் ஞானசம்பந்தன், நமோ நாராயணன், துளசி உள்பட இந்த படத்தில் நடித்த அனைத்து கேரக்டர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கச்சிதமாக உள்ளது. இரண்டு படங்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் முனுமுனுக்க வைக்கிறது. ஒளிப்பதிவு எடிட்டிங் ஆகியவை மிகக் கச்சிதமாக இருப்பதால் படம் பார்க்கும்போது எந்த இடத்திலும் ஒரு தொய்வு ஏற்படவில்லை
சமுத்திரக்கனியின் திரைக்கதை குறிப்பாக இரண்டாம் பாதி பரபரப்பாக இருப்பதால் ரசிகர்கள் இந்த படத்தை நன்றாக என்ஜாய் செய்வார்கள் என்பது உறுதி . குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இந்த படத்தில் பெரிய குறைகள் இல்லை என்பதும் சசிகுமார்-சமுத்திரக்கனி கூட்டணியில் மற்றொரு சிறப்பான படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் ஜாதி ஒழிப்பு என்பது ஒரே நாளில் நடக்கக்கூடியது அல்ல என்றாலும் இம்மாதிரி படங்களைப் பார்க்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக ஜாதி வெறியர்களின் மனதில் மாற்றம் வரும் என்பது உறுதி
ரேட்டிங்: 4/5
நடிகை திரிஷா…
கங்குவா படம்…
நடிகர் சல்மான்…
Ajithkumar: நடிகர்…
சென்னை வானகரத்தில்…