கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நபர்… பிஸ்கட்டுக்குள் இளம்பெண் வைத்துச் சென்ற பொருள்!

சிறையில் இருக்கும் தனது உறவினரைப் பார்க்க சென்ற 21 வயது பெண் பிஸ்கட் பாக்கெட்டுக்குள் கஞ்சாவை ஒளித்து வைத்துச் சென்றுள்ளார்.

சென்னைக்கு அருகே உள்ள கரையான்சாவடியில் தனி கிளை சிறை ஒன்று உள்ளது. அங்கு கார்த்திக் என்பவர் கொலை வழக்கு ஒன்றுக்காக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்க அவரின் உறவினரான 21 வயது வளர்மதி என்ற பெண் வந்துள்ளார். அப்போது வழக்கமாக சிறைக்கைதிகளுக்கு உறவினர்கள் கொடுப்பது போல கார்த்திக்கு கொடுக்க, பழங்கள் மற்றும் பிஸ்கெட் ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து அதைப் போலிஸார் சோதனை செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. பிஸ்கட்டுகளின் துளையிட்டு நடுவில் கஞ்சாவை ஒளித்து வைத்து அவர் எடுத்து வந்துள்ளார். இதையடுத்து வளர்மதி கைது செய்யப்பட்டு பூவிருந்தவல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்அந்த பிஸ்கட் பாக்கெட்டுக்குள் சுமார் 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Published by
adminram