உத்தர பிரதேச மாநிலத்தில் தனது குடும்பத்தைக் கொலை செய்த நபர் போலீஸுக்கு தகவல் சொல்லிவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சேதன் துளசியன். இவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்துள்ளார். வீட்டின் கீழ்தளத்தில் அவரது பெற்றோர் வசித்து வந்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்த சேர்தன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலை செய்து விட்டதாக சொல்லியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியான போலீஸார் அவரது வீட்டுக்கு செல்ல அங்கு கீழ்தளத்தில் இருந்த பெற்றோர் போலிஸாரைப் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர். அவர்களிடம் விவரங்களை சொன்ன போலிஸார் மேல் தளத்துக்கு சென்று கதவை உடைத்துப் பார்த்த போது சேதனும் தற்கொலை செய்து கொண்டு சடலமாகக் காணப்பட்டுள்ளார். அவரருகில் அவரது மனைவி மற்றும் மகளின் உடலும் கிடந்துள்ளன. அனைத்து உடல்களையும் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…