என்னப்பா சொல்றீங்க... இந்த வருஷம் டிசம்பரும் இல்லயா..? விடாமுயற்சிக்கே டப் கொடுப்பாங்க போலயே...!
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் 500 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெருமையையும் புஷ்பா திரைப்படம் பெற்றிருந்தது.
இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க, ராஸ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார் .மேலும் பகத் பாஸில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காரணத்தால் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதற்கு பட குழுவினர் முடிவு செய்திருந்தார்கள்.
அதன்படி படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகின்றது. புஷ்பா 2 தி ரூல்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ஸ் காட்சிகள் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில் படத்தின் சூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போது எடுத்த வரையில் படத்தைப் பார்த்த சுகுமாருக்கு திருப்தி கொடுக்காத காரணத்தினால் ரீசூட் நடத்த போகிறார் என தகவல் வெளியாகி இருந்தது. அது எல்லாம் வதந்தி என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தார்கள். இந்த திரைப்படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று கூறியிருந்தார்கள்.
ஆனால் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடையாத காரணத்தினால் படத்தை டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தார்கள். தற்போது வந்த தகவலின் படி டிசம்பர் மாதமும் இந்த திரைப்படம் வெளியாக போவதில்லையாம். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
இதை பார்த்து ரசிகர்கள் பலரும் எதற்காக படத்தை இப்படி இழுத்துக் கொண்டே செல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டு இருப்பது போல புஷ்பா 2 திரைப்படத்தையும் இப்படி இழுத்து வருகிறார்களா என ரசிகர்கள் கேலி செய்து வருகிறார்கள்.