சுவர் ஏறி குதித்து வீட்டை நோட்டமிடும் கொள்ளையன் – பீதியில் பொதுமக்கள்

Published on: January 18, 2020
---Advertisement---

20c1a9020c370da569633447c8bf64e1

சமீப காலமாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் மர்ம நபர் ஒருவர் இரவு நேரங்களில் நடமாடி வருவதாக கூறப்படுகிறது. 

மோட்டார் சைக்கிளில் வரும் அந்த நபர் அப்பகுதியில் உள்ள மருதம் நகர், பாரதி காலணி ஆகிய இடங்களில் மூன்று வீடுகளில் அவர் திருட முயன்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சுவரை ஏறி குதித்து ஜன்னல் வழியாக அந்த நபர் வீட்டை நோட்டமிடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். அந்த திருடனை போலீசார் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Comment