டோல்கேட்டில் எஸ்.ஐ. கொலை – சந்தேக நபர்களின் புகைப்படம் வெளியீடு !

கன்னியாகுமரியில் டோல்கேட்டில் காவலுக்கு நின்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

விபத்து காரணமாக 2 மாதங்களாக ஓய்விலிருந்த சிறப்புக் காவல் ஆய்வாளர் வில்சன் சமீபத்தில் பணிக்கு சேர்ந்தார். இதையடுத்து அவருக்குக் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்றிரவு பணி கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது அங்கு ஸ்கார்பியோ காரில் வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டு தப்பி சென்றுள்ளனர். சக காவலர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனிள்ளாமல் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் தமிழகத்தில் பதட்டம் அதிகமான நிலையில் குற்றவாளிகளைப் பிடிக்க தமிழக போலிஸார் தீவிர முனைப்பில் உள்ளனர்.

இந்த கொலையில் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த தவுபீக், ஷமீம் ஆகிய இருவரை சந்தேகப்பட்டு போலிஸார் தேடி வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கேரள போலிஸாரின் உதவியையும் நாடியுள்ளனர்.

Published by
adminram