அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா அவரின் இனிமையான இசையின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர். பல வருடங்களாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் அவர் இசையமைத்து வந்தார்.
ஆனால், பிரசாத் ஸ்டுடியோ நிறுவனத்திற்கும் அவருக்கும் இடையே சில மோதல் எழுந்தது. அதன்பின் வந்த விவாகரம் நீதிமன்றத்திற்கு போனது. இந்த வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இளையராஜா தான் இசையமைக்கும் புதிய படங்களுக்கான பணியை தனது வீட்டிலேயே துவங்கிவிட்டார். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள தமிழரசன் திரைப்படத்திற்கான இசைக் கோர்ப்பு பணிகளை தனது வீட்டிலேயே செய்து வருகிறார். இதற்காக ஓட்டு மொத்த இசைக்கலைஞர்களும் அவரின் வீட்டிற்கே வந்து இசையை லைவாக வாசித்து வருகிறார்கள்.
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…
நலன் குமாரசாமி…