ஆரம்பமே அதிர்ச்சி – என்ன ஆச்சு ரன் மெஷின் கோலிக்கு?

Published on: February 11, 2020
---Advertisement---

10940da331b0c57581a81b03d68da9e3

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

நியுசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரு போட்டிகளில் தோல்வியைடைந்து தொடரை இழந்துள்ள இந்திய அணீ மூன்றாவது போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய மயங்க் அகர்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே 1 மற்றும் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 9 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 42 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போது பிருத்வி ஷா 32 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர். இந்த தொடர் முழுவதும் இந்திய கேப்டன் கோலி தனது வழக்கமான பார்மில் இல்லாமல் சொதப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment