கதை செமயா இருக்கே! மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் கார்த்திக்..

Published on: February 4, 2020
---Advertisement---

4e05ab26a686104da420b78ecad0fc62

90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கார்த்திக். தனது அசால்ட்டான, அசத்தலான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பிற்கு வராமல் டிமிக்கி கொடுத்து கெட்ட பெயர் எடுத்ததால் இயக்குனர்கள் அவரை கைவிட்டனர். அதன்பின் சில திரைப்படங்களில் வில்லனாக நடித்தார். 

இந்நிலையில், தற்போது மீண்டும் கதாநாயகனாக அவர் களம் இறங்கவுள்ளார். ‘அடடா என்ன அழகு’ படத்தை இயக்கிய ஜெயமுருகன் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படம் கிழக்கு சீமையிலே படம் போல் செண்ட்டிமெண்டை மையமாக வைத்து உருவாகிறது. இப்படத்தில் சுகன்யா, ஜான் விஜய், சேது புகழ் அபிதா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர். 

இப்படம் வெற்றி பெற்றால் கார்த்திக் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment