தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரின் நிஜவாழ்வில் நடந்த ’கனா’ கதை

பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சர் கடந்த சில ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி வந்த நிலையில் சமீபத்தில் அவர் விளையாடிய ஒரு போட்டியின் போது கண்ணில் அடிபட்டு அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதனால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டது

இதே போன்ற காட்சிகள் தான் சிவகார்த்திகேயன் நடித்த கனா படத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அருண் ராஜா காமராஜ் இயக்கிய உருவாகிய ‘கனா’ படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு கிரிக்கெட் வீரராக நடித்திருப்பார். அந்த படத்தின் கதையின்படி சிவகார்த்திகேயன் கேரக்டரின் கண்கள் கிரிக்கெட் விளையாடும்போது பாதிக்கப்பட்டு அதன் பின் சில நாட்கள் மெக்கானிக்காக வேலை பார்ப்பார். பின்னர் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பை ஏற்று அந்த அணியை சாம்பியனாக்குவார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கனா படத்தின் கேரக்டர் அப்படியே தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் மார்க் பவுச்சர் வாழ்க்கையில் நிஜ வாழ்க்கையாக மாறியுள்ள ஒற்றுமையை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து டுவிட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram