பாண்டிச்சேரியில் மது விருந்து…129 கி.மீ வேகம்… யாஷிகா விபத்து பின்னணி என்ன?…

Published on: July 27, 2021
---Advertisement---

6bec997ded75cf9a52a6e3998e3a4e18-1

சில திரைப்படங்களிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது எல்லோருக்கும் தெரியும். அதன் பின்னணி பற்றி பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னையிலேயே தங்கியிருக்கும் யாஷிகா ஆனந்த் வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள சொகுசு விடுதிகளில் நடைபெறும் மது விருந்து நிகழ்ச்சி மற்றும் பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர்.

விபத்தில் மரணமடைந்த அவரின் தோழி வள்ளிச்செட்டி பவானி அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர். ஒரு வாரத்திற்கு முன்பு இந்தியா வந்த அவர் சில தினங்களுக்கு முன்பு யாஷிகாவை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளர்.

32a637c8f22734549e51d5ede9cd96b2

லாக்டவுன் தளர்ந்து பல மாதங்கள் கழித்து தோழியை சந்தித்த மகிழ்ச்சியில் தோழி பவானி, ஆண் நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் காரில் புதுச்சேரி சென்று பார்ட்டி கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். பார்ட்டி முடிந்து சனிக்கிழமை இரவு அவர்கள் சென்னை திரும்பியுள்ளனர்.

யாஷிகா ஆனந்தே காரை ஒட்டியுள்ளார். காரில் வந்து கொண்டிருந்த போது பாவனி எடுத்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பார்க்கும்போது யாருமே சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை போலீசார் ஆராய்ந்து பார்த்ததில் யாஷிகா ஆனந்த் காரை சுமார் 129 கி.மீ வேகத்தில் ஓட்டியது தெரியவந்தது. ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்தை சந்தித்துள்ளது.

0ab52333d7f150798fcdcf0fbcb23d4f

இதில், பவானி தூக்கி வீசப்பட்டு பள்ளத்தில் கிடந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் காரில் இருந்த மூவரை மட்டுமே பார்த்துள்ளனர். ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து அவர்களை அனுப்பிய பின்னரே அவர்கள் பள்ளத்தில் கிடந்த பவானியை பார்த்துள்ளனர். சுமார் 45 நிமிடம் அவர் அப்படியே கிடந்தார். அங்கேயே அவர் உயிரும் பிரிந்துவிட்டது. முன்பே அவரையும் பார்த்திருந்தால் அவரையும் காப்பாற்றி இருப்போம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தோழி எங்கே என்றே தேடும் நிலையில் கூட நிதானம் இல்லாமல் செய்யதுவும், அமீரும் இருந்துள்ளனர்.

முதலில் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் சில மணி நேரங்களில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தற்போது அங்குதான் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3aa8a6c4f96b963a56f3de422497dd9d

யாஷிகாவுக்கு இடும்பெலும்பு மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. கையிலும் லேசான முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் எழுந்து நடக்கவே பல மாதங்கள் ஆகும் எனத்தெரிகிறது. அப்படியே அவர் நடந்தாலும் முன்பு போல் அவரால் செயல்பட முடியுமா என்பது சந்தேகமே என மருத்துவனை வட்டாரம் தெரிவிக்கிறது.

யாஷிகா மீது கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, அவருக்கு சிகிச்சை முடிந்தபின் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளருக்கு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.

பிரலங்கள் மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்துவது அல்லது போலீசாரிடம் சிக்குவது என தொடர்கதையாகி விட்டதால், இனிமேல் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். அதன் விளைவாகவே யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment