More

சிவாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த வலிமை… என்னன்னு தெரியுமா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் ‘அண்ணாத்தே’ திரைப்படத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்திசுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

Advertising
Advertising

இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சில நாட்கள் நடைபெற்றது. 25 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே முடிந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. அடுத்த மாதம் அக்டோபர் 9ம் தேதி அதே ராமோஜிராவ் பிலில் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதில், ரஜினியும் கலந்து கொள்ளவிருக்கிறார் என்பதுதான் ஹைலைட்…  

இந்நிலையில், தர்பார் படத்தில் சில க்ளோசப் காட்சிகளில் ரஜினியின் முகத்தில் சுருக்கம்தெரிந்ததாக விமர்சனம் எழுந்தது. இது அண்ணாத்தேவில் நடக்கக்கூடாது என சிவா கருதினாராம். அவர் எதிர்பார்த்த படியே இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளில் ரஜினியின் முகம் அழகாக அமைந்திருப்பது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம். 

Published by
adminram

Recent Posts