More

மோனலின் தற்கொலை ; கலா மாஸ்டருக்கு உதவிய மும்தாஜ்? : அதிர்ச்சி தகவல்

பார்வை ஒன்றே போதுமே, பத்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மோனல். இவர் பிரபல நடிகை சிம்ரனின் தங்கை ஆவார். திடீரென அவர் கடந்த 2002ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இவர் நடிகர் குணாலை காதலித்ததாகவும் அதில் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்போது செய்திகள் வெளியானது.

ஆனால், அவர் குணாலை காதலிக்கவில்லை. மாறாக நடன இயக்குனர் கலா மாஸ்டரின் சகோதரர் பிரசன்னாவை காதலித்தார் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களின் காதலை கலா மாஸ்டரின் வீட்டார் ஏற்காததால் மனமுடைந்த மோனல் தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.இந்த தகவலை சிம்ரனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

மேலும், மோனல் தற்கொலை செய்து கொண்டவுடன், கலா மாஸ்டரின் தூண்டுதலின் பேரில் நடிகர் ரியாஸ் மற்றும் மும்தாஜ் ஆகியோர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மோனலின் வீட்டிற்கு சென்று மோனலின் டைரி உள்ளிட்ட சில முக்கிய தடயங்களை எடுத்து சென்றுவிட்டதாக சிம்ரன் கூறியுள்ளார்.

Advertising
Advertising

மும்தாஜும், கலா மாஸ்டரும் நெருக்கம் என்பது எல்லோருக்கும் தெரியும். மும்தாஜ் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த போது ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் அவரை ஜட்ஜாக கலா நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சிம்ரன் கூறுவது உண்மைதான் என கோடம்பாக்கத்தில் பலரும் பேச துவங்கியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts