நெஞ்சில் பட்ட பந்து – கிரிக்கெட் வீரருக்கு நடந்த சோகம்!

செங்கல்பட்டு சூனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சுனில் என்ற இளைஞர் வேகமாக வந்த பந்து தாக்கியதால் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அகரம் என்ற கிராமத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தனஇதில் நடைபெற்ற ஒரு போட்டியில் சூனாம்பேடு மற்றும் அச்சிறுபாக்கம் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த அணிகள் மோதின. அந்தப் போட்டியின் போது சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற இளைஞர் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

எதிரணியைச் சேர்ந்த கமலேஷ் என்ற 11ஆம் வகுப்பு மாணவன் பந்து வீச அது சுனிலின் நெஞ்சில் பட்டு அவர் துடித்து விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பாதியிலேயே உயிரிழந்தார். அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களும் அதை உறுதி செய்தனர். இச்சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Published by
adminram