படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்... மேலும் மேலும் சிக்கல்....படாத பாடுபடும் மணிரத்னம்....

by adminram |

8add8c17d3a9c996bee7f0ea614a0248

இயக்குனர் மணிரத்னம் தற்போது பலரும் தொட தயங்கிய மற்றும் எடுக்க முடியாமல் போன ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை மணிரத்னத்துடன் இணைந்து லைகா நிறுவனமும் தயாரித்து வருகிறது.

பாகுபலியை போல் இப்படம் 2 பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அனுஷ்கா, திரிஷா, நயன்தாரா, அமலாபால் என பெரிய நடிகர், நடிகையர் பட்டாளமே நடித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில், மத்திய பிரதேசம் மாநிலம் ஒரிசாவில் ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.

faab8ee6e090657dc099ae108367e098-2

இப்படத்திற்காக விலை உயர்ந்த குதிரைகளை மணிரத்னம் பயன்படுத்திருந்தார். இந்தியாவில் இந்தியா சிமெண்ட் குடும்பத்தினர் மற்றும் காரைக்குடியில் வசிக்கும் சிலர் என பலரிடமும் கெஞ்சிக் கூத்தாடி அவர்களிடமிருந்த விலை மதிப்புள்ள குதிரைகளை வாங்கி படப்பிடிப்பிற்கு பயன்படுத்தியுள்ளனர். அந்த குதிரைகளை அவர்கள் தங்களின் கௌரவமாக கருதி வளர்த்து வந்துள்ளனர்.

a03ae3e610d19e521ecf07d6da360dc2

ஆனால், ஒரிசாவில் படப்பிடிப்பு நடைபெற்ற போது மொத்தமுள்ள 65 குதிரைகளில் 8 குதிரைகள் இறந்துபோய்விட்டது. இதில், அவர்களிடம் வாங்கிய குதிரைகளும் அடக்கம். எனவே, பல லட்சங்கள் நஷ்ட ஈடு கேட்டு அவர்கள் மணிரத்தினத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனராம். ஏற்கனவே, படப்பிடிப்பில் குதிரை இறந்து போனது தொடர்பாக பீட்டா நிறுவனம் மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை மணிரத்னம் எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

Next Story