கட்டையை வைத்து வரலட்சுமியின் மண்டையைப் பொளந்த நடிகர்... எல்லாத்துக்கும் காரணம் அவர்தான...
இயக்குனர் பாலா எப்பவுமே ரியலா காட்சிகளை எடுக்கணும்னு நினைப்பார். அதற்கு நிறைய சர்ச்சைகளும் வந்துருக்கு. பல நடிகர்களும் அவரது படங்களில் நடிக்கத் தயங்குவர். அந்த வகையில் ஒரு படத்தில் வரலட்சுமியின் மண்டையைப் பொளந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா...
சில காட்சிகளில் ரியலா 'நீங்க விழுந்தே ஆகணும்'னு கட்டாயப்படுத்துவாராம். அதற்கு நிறைய பேர் பேட்டி எல்லாம் கொடுத்துள்ளார்களாம். 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லன் ஆர்.கே.சுரேஷ் வரலட்சுமியின் தலையில் அடிக்கணும்.
Also Read: சரத்குமாரை பழிவாங்கத் துடித்த வரலட்சுமி... அதுக்காக இப்படியா பண்றது?
அதற்காக கண்ணாடியால் ஆன ஒரு உருளையை டம்மியாக ஆர்ட் டைரக்டர் தயார் செய்து வச்சிருக்காரு. அதை எடுத்துப் பார்த்த பாலா வேற ஒரு நிஜமான உருளையைக் கொண்டு வரணும்னு சொல்லிட்டாராம். யூனிட்டே பதறிப் போயிடுச்சாம்.
கேமராமேன் செழியன் சொன்னாராம். 'என்னவோ ஒரு கேஸ்ல நாம எல்லாரும் மாட்டப்போறோம்'னு. ஆர்.கே.சுரேஷ் பாலாவிடம் சார்னு சொன்னாராம்... 'அடிய்யா பார்த்துக்கலாம்'னு சொல்லிட்டாராம். அடிக்கும்போது முதல் முறை மிஸ் ஆயிடுது. இது வரலட்சுமிக்குத் தெரியாது.
இரண்டாவது முறை பாலா டென்ஷனாகுறாரு. 'அடி...'ங்கறாரு. 'சரி ஓகே'ன்னு அடிச்ச உடனே அப்ப தான் தெரியுது நிஜமான அடின்னு.... அலற ஆரம்பிக்கிறாங்க. மண்டைல இருந்து ரத்தமா கொட்டுது. 6 தையல் போடுறாங்க. ஆனால் அந்தக் காட்சி நல்லா வந்தது.
அந்த நேரம் பாலாவுக்கு எதிராக புகார்கள் கொடுக்கச் சொல்லி சாயாதேவியை சில பேர் தூண்டி விட்டதாக தகவல்கள் வந்தது. ஆனால் சாயாதேவி சொன்னது இதுதான். 'ஒரு காட்சி நல்லா வரணும்கறதுக்காக இயக்குனர் பண்ணிருக்காரு. அதுக்கு என் பொண்ணே வருத்தப்படல. என் பொண்ணு வந்து இது பண்ணினா தான நான் முடிவு பண்ணனும்'னு சொன்னாராம்.
Also Read: மோகன் படத்தைப் பார்த்த எம்ஜிஆர்... பயந்து நடுங்கிய தயாரிப்பாளர்... புரட்சித்தலைவர் சொன்ன அட்வைஸ்
'டைரக்டர் முடிவு பண்ணி எடுத்துருக்காரு. அவரைப் பத்தி எனக்குத் தெரியும். இந்த ஸ்கிரிப்டே எனக்காகத் தான் உருவாக்கினாரு'ன்னு வரலட்சுமி சொன்னாராம். படத்திற்கு அப்படி ஒரு காட்சி நல்லா அமைஞ்சி தேசிய விருதோ, ஆஸ்கர் விருதோ கிடைச்சிட்டா என் பொண்ணுக்குத் தான பெருமை. நீங்க போங்கன்னு சாயாதேவி சொல்லிட்டாராம். அதுவந்து பாலாவின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.