ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இயக்குனர்களின் ராசியான நடிகையாக வலம் வருண் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சொந்த வாழ்க்கையில் பிசியாக இருந்தாலும் நடிப்பில் தூள் கிளப்புகிறார். தனது வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்து நிறைய சர்ச்சைகளில் சிக்கி பேசப்பட்டவர்.
இந்நிலையில் இடையில் சில காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டிருந்தவர் அட்லீயின் ராஜா ராணி படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வளர்ந்து நிற்கிறார். இந்நிலையில் அந்த இடைவெளி குறித்து பேசிய நயன்தாரா, ” நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வாழந்து நான் இருந்தேன். என்னுடைய படத்தையோ பாட்டையோ கூட டிவியில் கூட நான் அப்போது பார்க்கவில்லை நான் தனிமையை விரும்பும் ஆள்.
கூட்டம் என்றால் எனக்கு ஆகாது. நான் பல முறை தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறேன், தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன்.ஒரு கட்டத்தில் அதையெல்லாம் என் படம் தான் பேச வேண்டும் என்று நினைத்தேன். நான் லீட் ரோலில் நடிக்கும் படங்களில் அனைத்தையும் நான் தான் முடிவு செய்வேன். என கூறினார்.
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…
Pongal Release:…
Sun serials:…
Veera Dheera…