மருத்துவமனை வாசலில் சோகமாக நிற்கும் இளம்பெண்… ஏமாந்த பலபேர் – நூதன மோசடி

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வாசலில் நிற்கும் பெண் ஒருவர் போலி தங்க நாணயங்களை கொடுத்து வினோதமான முறையில் அங்கு வருபவர்களை ஏமாற்றியுள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை 24 மணிநேரமும் கூட்டமாக இருக்கும் முக்கியமான இடம். அங்கு ஒரு நாளில் 1000 கணக்கானப் பேர் நோயாளிகளை சந்திக்க வந்து செல்கின்றனர். இந்நிலையில் அதன் வரவேற்பரையில் நிற்கும் பிரியா என்ற பெண் சோகமாக அழுதுகொண்டே ‘எனது தந்தைக்கு உடம்பு சரியில்லை. இந்த தங்க நாணயத்தை வைத்துக்கொண்டு 500 ரூபாய் மட்டும் கொடுங்கள்’ என பரிதாபமாக கேட்பது வழக்கம்.

அதை நம்பி அவர் மேல் இரக்கப்பட்டு பலர் அவரிடம் நாணயம் வாங்கிக்கொண்டு காசு கொடுக்க பின்னர்தான் ஏமாந்தது தெரியவந்துள்ளது. அவர் கொடுத்த நாணயங்கள் அனைத்தும் போலியானவை என்று. இது மாதிரி பலரும் புகார் சொல்ல, போலீஸார் பிரியாவை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் பிரியா இது போல பலரிடமும் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Published by
adminram