நண்பனைக் கொன்று செல்பி எடுத்த இளைஞன் – பின்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு !

கேரளாவில் இரண்டு நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் மற்றவரைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்களான அலி மற்றும் ஜலாலுதீன் கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர் இருவருக்கும் அடிக்கடி சண்டை வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதுபோல இருவருக்கும் இடையே சண்டை வர அலி, நண்பன் என்றும் பாராமல் ஜலாலுதீனைக் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தோடு நின்று செல்பி மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவனைக் கைது செய்ய முயல, தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவரைக் காப்பாற்றிய போலிஸார் மருத்துவக் கல்லூரி அனுமதித்துள்ளனர்.

ஜலாலுதீனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதும் சொந்த ஊருக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
adminram