‘சூரரைப் போற்று’ படத்தை திரையிட எதிர்ப்பு... அதிர்ச்சியில் சூர்யா....
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடிக்கிடந்த போது தயாரிப்பாளர்களின் எதிர்ப்பை மீறி தனது ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டு பிள்ளையார் சுழி போட்டவர் நடிகர் சூர்யா. இதனால் தியேட்டர் அதிபர்களின் கோபத்திற்கு ஆளானார். அதேபோல், அவரின் தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியானது. எனவே, இனிமேல் சூர்யா, ஜோதிகா நடிக்கும் திரைப்படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் அறிவித்தனர்.
ஆனால், சூர்யா பின்வாங்கவில்லை. மேலும், அவரது தயாரிப்பில் உருவாகி வரும் ஜெய் பீம், உடன் பிறப்பே, ஓ மை டாக், ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும் ஆகிய படங்கள் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவித்து மீண்டும் தியேட்டர் அதிபர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் சூர்யா. அதோடு, பாலா இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள புதிய படத்தையும் ஓடிடியிலேயே ரிலீஸ் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தியேட்டர் அதிபர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், சூர்யா தனது ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிட விரும்பினார். ஆனால், சில திரையரங்க உரிமையாளர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இது சூர்யாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். இந்த பஞ்சாயத்து விரைவில் தீர்க்கப்பட்டு ‘சூரரைப் போற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.