சென்னையில் சில இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மைனர் சிறுவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவரிடம் இருந்து கும்பல் செல்போனைத் திருடி சென்றது. இது சம்மந்தமாக அவர் புகார் அளிக்க போலிஸார் விசாரணையில் இறங்கினர். அப்போது சம்மந்தப்பட்ட கும்பல் தி நகரிலும் இதுபோல ஒரு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை முடுக்கினர்.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த கும்பல் டிக்டாக் வீடியோ ஒன்று வெளியிட அது போலீஸாரின் பார்வைக்கு வந்தது. அதை வைத்து போலீஸார் அந்த கும்பலை பிடித்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் 16, 17 வயதுடைய மைனர் சிறுவர்கள்.
போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி அதற்குக் காசு இல்லாமல் போதை மாத்திரைகள் வாங்க செல்போன் திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டனர் எனப்து தெரிய வந்துள்ளது.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…