‘அமரன்’ ஹிட்டானாலும் நம்பிக்கை இல்லையே.. தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடக்கும் குளறுபடி
தயாரிப்பாளராக தனுஷ்: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். விடலை பருவ காதல், கொஞ்சம் காமம் என முதல் படத்திலேயே ஒரு பிளே பாயாக மக்கள் முன் அறியப்பட்டார். அந்த காலகட்டத்தில் அப்படி மாதிரியான படங்களை ஃபேமிலி ஆடியன்ஸ் விரும்பவில்லை. அதனால் தனுஷ் மீது ஒரு வித வெறுப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காதல், இரட்டை அர்த்தமுள்ள வசனங்களை படத்தில் பேசுவது என ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்தார் தனுஷ்.
ஹாட்ரிக் வெற்றி: இருந்தாலும் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் என தன் கெரியரை ஆரம்பித்ததே வெற்றியில்தான் ஆரம்பித்தார் தனுஷ். அதுவும் காதல் கொண்டேன் திரைப்படத்தில் ஒரு வித சைக்கோத்தனமான கேரக்டரில் நடித்திருப்பார். அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய பெருமை வெற்றிமாறனை சேரும். பொல்லாதவன் படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார் தனுஷ்.
தனுஷின் கெரியருக்கு வெற்றிமாறனின் பங்கு: பொல்லாதவன் படத்திற்கு பிறகு தொடர்ந்து வெற்றிமாறனுடன் நான்கு முறை இணைந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி வெற்றிக்கூட்டணி என்று சொல்ல வைத்தனர். அடுத்ததாகவும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தனுஷ் இப்போது இட்லி கடை என்ற படத்தில் நடித்து அந்தப் படத்தை இயக்கியும் வருகிறார்.
மேலும் தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் ரிலீஸில் பல பிரச்சினைகள் எழுந்தது. அந்த நேரத்தில் உதவி செய்தவர் மதுரை அன்பு. அதிலிருந்து இன்று வரை தனுஷுக்கு பக்க பலமாக இருப்பவர் மதுரை அன்புதான். தனுஷ் படத்தை தயாரிக்கிறார் என்றால் அவருக்கு ஃபைனான்ஸ் செய்வதே மதுரை அன்புதான். அதனால்தான் அவருடைய தயாரிப்பில் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக தனுஷ் ஒப்பந்தம் செய்தார்.
175 கோடி பட்ஜெட்டா?: அதுசம்பந்தமாக பூஜையும் போடப்பட்டது. ஆனால் இந்தப் படத்தின் பட்ஜெட் 175 கோடி என ராஜ்குமார் பெரியசாமி சொல்லியிருக்கிறார். இது கேட்டதும் மதுரை அன்புக்கு ஷாக் ஆகிவிட்டதாம். அதனால் மதுரை அன்பு ஒரு வேளை இந்தப் படத்தில் இருந்து விலகவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு பக்கம் அமரன் போன்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் ராஜ்குமார் பெரியசாமி.
இன்னொரு பக்கம் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துவரும் தனுஷ். இப்படி இருந்தும் மதுரை அன்பு ஏன் பட்ஜெட்டை பற்றி யோசிக்கிறார் என்று தெரியவில்லை. ஒன்று தயாரிப்பாளர் மாற்றப்படலாம் அல்லது இயக்குனர் மாற்றப்படலாம் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.