
மி டூ வந்தன் பின்னர் கூட சினிமா உலகில் எந்த மாற்றமும் இல்லை என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா ஆப்தே சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இன்று பாலிவுட்டின் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘மி டூ இயக்கம் வந்த போது நான் மகிழ்ச்சியடைந்தேன். இதன் மூலம் பல பேர் மாட்டுவார்கள் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் எந்த மாற்றமும் நடக்கவில்லை. மி டூ இயக்கம் நீர்த்துப் போய்விட்டது’ எனத் தெரிவித்துள்ளார்.
மி டூ இயக்கம் இந்திய சினிமாவில் 2018 ஆம் ஆண்டின் கடைசியில் இருந்து 2019 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை பரபரப்பைக் கிளப்பியது. பல நடிகைகள் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களை வெளி உலகுக்கு அடையாளம் காட்டினர். ஆனால் அது சட்டப்பூர்வமாக எந்த வித தண்டனைகளையும் அவர்களுக்கு வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





