More

ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை! சைக்கோ பட விமர்சனத்துக்கு மிஷ்கின் பதிலடி !

மிஷ்கின் தன்னுடைய படங்களில் லாஜிக் இல்லை என்று சொல்வதற்கு ராமாயணத்தை முன்னிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertising
Advertising

கடந்த வாரம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் பாராட்டையும் விமர்சனங்களையும் ஒருசேர பெற்றுள்ளது. இதற்குக் காரணம் படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகள். கண் தெரியாத நாயகன் பல கிலோ மீட்டர் தூரம் கார் ஓட்டுவது போன்ற காட்சிகள் நகைப்புக்குள்ளாகியுள்ளன.

அது போல கொலைகள் பட்ட பகலில் பொது இடங்களில் நடக்கும் போது அங்கு ஒரு இடத்தில் கூட சிசிடிவி கேமராக்கள் இல்லையா? அதை வைத்து போலீஸ் துப்பு துலக்காதா என்கிற கேள்விகளை ரசிகர்களும் விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றன. இதை வைத்து மிஷ்கினை பலரும் கேலி செய்ய அவருக்கு ஆதரவாகவும் பதிவுகள் எழுதப்பட்டு வருகின்றன.

இதற்கு ஏற்கனவே மிஷ்கின் பதில் அளித்து இருந்தாலும் இப்போது மீண்டும் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். சமீபத்தில் நடந்த வால்டர் என்ற படத்தின் விழாவில் கலந்துகொண்ட மிஷ்கின் ‘ என் படங்களில் லாஜிக் இல்லை என்று சொல்லப்படுகிறது. ராமாயணத்தில் கூடதான் லாஜிக் இல்லை. அடுத்தவன் மனைவியான சீதாவை ராவணன் தூக்கிச் சென்றதில் என்ன லாஜிக் இருக்கிறது. அதற்கு ஆதரவாக கும்பகர்ணன் ஏன் போரிட்டான். இதில் எல்லாம் என்ன லாஜிக் இருக்கிறது?’ எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Published by
adminram

Recent Posts