">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கர்ப்பத்தை கலைக்க பணமில்லை…. வாலிபர் செய்த பகீர் சம்பவம்.. பிணமாக கடந்த பெண்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் கரேகான் கிராமத்தில் வசித்து வந்த நபர் ஒருவர் அப்பகுதி காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும், தான் ஒரு மனநோயாளி என்றும் அவரே கூறியுள்ளார். போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரிவந்துள்ளது.
27 வயதுடைய அந்த வாலிபர் அந்த கிராமத்தில் ஒரு பெண்ணோடு திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தார். இதில், அப்பெண் கர்ப்பம் அடைந்தார். ஆனால், கருவைக்கலைக்க இருவரிடம் பணம் இல்லை. எனவே, இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை எழுந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கர்ப்பிணி பெண்ணை வாலிபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபர் மீது பிரிவு 302 கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.