இந்தியாவிலேயே இதுபோன்ற ஒரு கதை படமானது இல்லை: ‘மாநாடு’ குறித்து பிரபல நடிகை பேட்டி

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ள ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் கோவையில் தொடங்க உள்ளது. கோவையில் ஒரு மாதமும் அதன் பின்னர் இலங்கையில் ஒரு மாதமும் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் 

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக, நாயகியாக நடிக்க இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் இந்த படம் குறித்து கூறிய போது ’இந்த படத்தின் கதையை கேட்டவுடன் இது போன்ற ஒரு கதையை இந்தியாவில் இதுவரை யாரும் படமாக்கியது இல்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். அவ்வளவு ஒரு அற்புதமான கதை. இந்த படத்தில் நான் இருக்கிறேன் என்பதே ஒரு பெருமையாக கருதுகிறேன் என்று கூறினார்.

மேலும் சிம்பு ஒரு அற்புதமான டான்ஸர், அவருக்கு இணையாக என்னால் டான்ஸ் ஆட முடியாது, இதை நான் வெங்கட் பிரபுவிடம் கூறியபோது நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எனக்கு நம்பிக்கை அளித்தார் அதன் பின்னர்தான் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். இந்த படம் வெளியானவுடன் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் இந்தியா முழுவதும் பேசப்படும். அப்படி ஒரு கதை. இந்த படத்தில் தன்னால் எவ்வளவு தூரம் நடிக்க முடியும் என்று தனக்கு தெரியாது என்றும் முழுமையாக வெங்கட்பிரபுவின் ஒப்படைத்துவிட்டேன் என்றும் அவர்தான் என்னிடம் இருந்து நடிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்

Published by
adminram