1. Home
  2. Latest News

சினிமாவுல அப்படி என்ன சாதிச்சிட்டாரு அஜீத்? எதுக்காக பத்மவிபூஷன்? பிரபலம் விளாசல்


அஜித்திற்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதை எடுத்து அதில் சந்தேகம் இருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். இதோ அவர் கூறியது: அஜித்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு புறம் சந்தோஷமாக இருந்தால் கூட இன்னொரு புறம் சில சந்தேகங்களையும் எழுப்பி இருக்கிறது. எல்லாத்துக்கும் மேல எனக்கு இந்த செய்தியை கேட்டவுடன் ஐய்யய்யோ இவர் எந்த நிகழ்ச்சிக்கும் போக மாட்டாரே? இவருக்கு இந்த விருதை கொடுத்து இந்த விழாவுக்கு இவர் போகலைனா என்ன பண்றது? அது வேற பெரிய சர்ச்சையாக மாறிவிடுமே ?என்றெல்லாம் பயந்துட்டு இருந்தேன். எனக்குத் தெரிந்து மத்திய அரசு இந்த விருதை அவருக்கு கொடுப்பதற்கு முன்னாடி அவருடைய பிரைவேசியை கெடுக்க வேண்டாம் என நினைத்திருக்கலாம்.

ஏனெனில் அவருடைய நீண்ட நாள் கொள்கையாகவே நான் எதிலுமே கலந்துக்க மாட்டேன். யாரையும் பார்க்க மாட்டேன். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதுதான். அப்படிப்பட்டவருக்கு போய் வம்படியாக கொடுத்து டெல்லிக்கு வரவழைத்து ஜனாதிபதி அவருக்கு அந்த பதக்கத்தை எல்லாம் குத்தும் பொழுது அவருடைய மனநிலை என்னவாக இருக்கும்? ‘ நான் என் வேலையை பார்த்துக்கிட்டு தானே இருந்தேன். என்னை ஏங்க இங்க கூட்டிட்டு வந்து நிக்க வைக்கிறீங்க’ அப்படின்னு தான் நினைப்பாரோ என்றெல்லாம் நான் நினைத்தேன்.

ஆனால் அதன் பிறகு அவருடைய அறிக்கை வந்தது. அதில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல பேருக்கு நன்றியை தெரிவித்து இருந்தார். ஓகே பரவாயில்லை. ஓரளவு கன்வின்ஸ் ஆகிவிட்டார். விழாவிற்கு வந்து விடுவார். அதற்கு தயாராகி விட்டார் என்பது போல அந்த அறிக்கையில் தெளிவாக தெரிகிறது. ஏனெனில் பிடிக்காத ஒருத்தரை கொண்டு போய் அங்கு நிறுத்தி வைத்து அவருக்கும் கஷ்டம். விருது கொடுக்கிற அவர்களுக்கும் கஷ்டம். சில பேர் விருது வாங்கிவிட்டு ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் விருதை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று கூட நடந்து இருக்கிறது.

ஆனால் எதன் அடிப்படையில் அஜித்துக்கு இந்த விருதை கொடுக்கிறார்கள் எனக்கு புரியவில்லை. ஒரு நடிகராக நினைத்து அந்த விருதை கொடுத்திருக்கிறார்கள் என்றால் அந்த விருதை அஜித்தே ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அவரை தன்னை நடிகராக நினைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் எனில் திரையுலகம் சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவர் கலந்து கொண்டது இல்லை. அவரை வைத்து படம் எடுத்தவர்களையும் அவர் மதித்தது இல்லை. ஒரு ஆடியோ விழாவிற்கும் வந்தது இல்லை.

இப்படி எல்லாவற்றையும் அவமானமாக நினைக்கும் ஒருவருக்கு எதற்கு சினிமாவில் பெரிய சாதனை பண்ணிவிட்டார் என இந்த விருதை கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. சரி விளையாட்டுத்துறையில் ஏதாவது சாதனை செய்து இருக்கிறாரா? அதற்காக கொடுக்கிறார்களா என்றாலும் அந்த அளவுக்கு சாதனையை அவர் படைக்கவில்லை. இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார். அதுவும் மூன்றாவது இடத்தில் அவர் தனியாக மட்டும் ஜெயிக்கவில்லை. அவருடைய அணி தான் அந்த வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

பத்மபூஷன் விருது கொடுப்பதற்கு முன் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்.. அஜித் பற்றி பகீர் கிளப்பிய பிரபலம்சிறந்த மனிதாபிமானம் உள்ளவரா என்றாலும் என்னைத் தவிர அவரைப் பற்றிய உண்மை வேற எவனும் சொல்ல முடியாது. வீட்டைத் திறந்து ஆயிரம் பேரை உள்ள அனுப்பி அத்தனை பேருக்கும் உதவி செய்தார், ஆயிரம் கண் ஆபரேஷன் செய்தார் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள். அப்படி ஒன்றும் அவர் செய்யவில்லை .இப்படி எதுவுமே காரணம் இல்லாத போது எதற்கு இந்த விருதை கொடுக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னணியில் அரசியல் தான் காரணம் என அந்தணன் கூறுகிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.