1. Home
  2. Cinema News

இந்தியன் 2 ஓடாமல் போனதற்கு இந்த 4 பேர் தான் காரணமா?.. அடேங்கப்பா!.. இப்படியொரு அதிர்ஷ்டமா?..


லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் பெரிதாக ஓடாமல் போனதற்கு காரணமே அந்த படத்தில் நடித்த நான்கு நடிகர்கள் தான் என நெட்டிசன்கள் புதிய தியரியை கூறி வருகின்றனர்.

கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்தில் இரண்டாவது ஹீரோவாக சித்தார்த் நடித்ததே பணத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு என்றும் ஷங்கருக்கு முதன்முதலாக தோல்வியை கொடுத்தது நடித்த பாய்ஸ் படம்தான் என்கின்றனர். சித்தார்த் சித்தா படத்தை நடித்து விட்டு இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை. அதற்கு முன்னதாகவே நடித்ததுதான் அவரது நடிப்பு பெரிதாக படத்தில் எடுபடாமல் போனதற்கு காரணம் என்கின்றனர்.

சித்தார்த்தை தொடர்ந்து ரகுல் பிரீத் சிங் சூர்யா நடித்த என்ஜிகே, சிவகார்த்திகேயன் நடித்த அயலான் என பல படங்களில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடித்த அந்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. அதே நிலைமை தான் இந்தியன் 2வுக்கு நேர்ந்தது என்கின்றனர்.

அடுத்ததாக பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் ஜெகபதி பாபு என்றே பங்கமாக கலாய்த்து மீமெல்லாம் போட்டு வருகின்றனர். நடிக்கவே தெரியாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் கொடுக்கப்பட்டதை போல ஒரு டம்மி ரோலில் இந்த படத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பது போல பாபி சிம்ஹாவை சொல்கின்றனர். அந்நியன் படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் போர்ஷனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ஷங்கரே அட்லீயாக மாறி வைத்து விட்டார். ஆனால், ஒரு சீனில் கூட பிரகாஷ் ராஜுக்கு கிட்ட கூட பாபி சிம்ஹா நடிக்கவே இல்லை.

இந்த 4 பேரை இந்த படத்துக்கு ஒப்பந்தம் பண்ண காஸ்டிங் டைரக்டரும் அதற்கு ஓகே பண்ண இயக்குநர் ஷங்கரும் அப்பவே நோ சொல்லியிருந்தால் கிரிஞ்சு படமாக இந்தியன் 2 வந்திருக்காது என ஒரு சில ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.