கேப்டனின் கொள்கைகளை சொல்லி அவர்கள் ஜெயித்துவிட்டார்கள்.. ஆனால்? –பிரேமலதா புலம்பல் !

கேப்டன் சொன்ன கொள்கைகளை சொல்லிதான் மற்ற மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளார்கள் எனப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக வின் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 20 ஆவது ஆண்டை முன்னிட்டு இன்று  அக்கட்சியினரால் 18 அடி கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. இதில் கலந்து அக்கட்சியின் பொருளாளர் நிறுவனர் விஜயகாந்த், செயலாளர் சுதீப் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பிரேமலத விஜயகாந்த் ‘ஆந்திரா, டெல்லி போன்ற மாநிலங்களில் நம் கேப்டனின் கொள்கைகளை பின்பற்றியவர்கள் எல்லாம் வெற்றி பெற்று முதல்வராகி விட்டனர்.

கேப்டன் சந்தித்த முதல் தேர்தலில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்ற வாக்குறுதியை விஜயகாந்த் அளித்தார்அதை சொல்லிதான் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராகியுள்ளார். கெஜ்ரிவாலும் கேப்டனின் கொள்கையான லஞ்சம், ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என்பதை சொல்லிடெல்லியில் ஆட்சியைப் பிடித்துள்ளார். அதே போல கேப்டனை ஒரே ஒரு முறை முதல்வராக்கி இருந்தால் ஒரு லட்சம் திட்டங்களை அறிவித்து அனைத்தையும் நிறைவேற்றி இருப்பார்.’ எனக் கூறினார்.

Published by
adminram