சன் டிவியில் வானிலை அறிக்கை வாசித்து புகழடைந்த மோனிகா சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்புகளைக் கிளப்பி வந்தார்.
90 ஸ் கிட்ஸ்கள் அனைவருக்கும் சன் டிவியில் வானிலை அறிக்கை வாசித்த மோனிகாவை நன்றாக நினைவிருக்கும். திருமணத்துக்குப் பின் சீரியல்கள் பக்கம் ஒதுங்கிய இவர் அதன் பின் அங்கிருந்தும் மாயமானார். திடீரென சமூக வலைதளங்களில் வீடியோ மூலம் தோன்றி அரசியல் கருத்துகளை தெரிவித்து வந்தார்.
அந்த வீடியோக்கள் மூலம் பரபரப்புகளை உண்டாக்கிய அவர் அதன் பின் அமைதியானார். இடையில் என்ன ஆனது என்பது குறித்து இப்போது தெரிவித்துள்ளார். வீடியோக்களில் ‘கட்சி சார்பின்றி அரசியல் பேசி வந்தேன். அதனால் சில பிரச்சனைகளுக்கு ஆளானேன். என் மகன் படிக்கும் பள்ளிக்கு சென்று அவனை புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி பயமுறுத்தினார்கள். அதனால் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கிணங்க நான் எந்த வீடியோவும் போடவில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…