இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல, மறந்துட்டேன்:  நவீனை வம்புக்கு இழுத்த ‘திரெளபதி’ இயக்குனர்

Published on: January 29, 2020
---Advertisement---

2a4dcc92476905bd00e5a6af5d48e549

இயக்குனர் ஜி மோகன் இயக்கிய ‘திரெளபதி’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடக காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பும், இன்னொரு பிரிவினர் ஆதரவும் கொடுத்து வருகின்றனர். 
திரையுலகிலேயே ஒரு சில இயக்குனர்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் நாடக காதலால் ஏமாற்றப்பட்ட 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமாகிய செய்தியின் வீடியோவை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள ‘திரெளபதி’ இயக்குனர் ஜி.மோகன், ’மூடர் கூடம்’ இயக்குனர் நவீனுக்கு ஒரு கேள்வியை எழுப்பி வம்புக்கு இழுத்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: நடுநிலையான மனிதர்களே.. இதற்கு பெயர் என்ன??? ஹரே @NaveenFilmmaker  பாய்.. உங்க போராளி குரல் இதுக்கெல்லாம் வராதா.. ஓஓஓ இது நீங்க சொல்லி கொடுத்த விஷயம்ல உங்க படத்துல.. மறந்துட்டேன்.. 

இயக்குனர் ஜி.மோகனின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி மோகனின் இந்த டுவீட்டுக்கு நவீன் என்ன பதிலளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Comment